• Feb 01 2026

பிக் பாஸ் 9 முடிந்தும் ஓயாத சர்ச்சை – மாயா, பூர்ணிமா ரவி பேசிய வீடியோ வைரல்!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் ஒன்பதாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 

இந்த சீசனில் திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து சபரிநாதன் முதல் ரன்னராகவும், விக்கல்ஸ் விக்ரம் இரண்டாவது ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர்.

பிக் பாஸ் 9 தொடக்கத்தில் நிகழ்ச்சி சற்று சலிப்பாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது, பல பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தது.

அதிலும் குறிப்பாக, டைட்டில் வின்னராக வருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பார்வதி கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர குவிந்தது.

அதேபோல், சக போட்டியாளரான சாண்ட்ராவை கார் டாஸ்க் போது தாக்கியதாக கூறப்பட்ட விவகாரம் பெரும் விவாதமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி முடிந்த பின்னரும் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், பிக் பாஸ் 7 போட்டியாளர்களான மாயா மற்றும் பூர்ணிமா ரவி இந்த விவகாரங்கள் குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மாயா சில முக்கிய கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், 'இப்போது எல்லாம் உண்மையான வெற்றியாளர்களுக்கு டைட்டில் கொடுக்கப்படுவதில்லை', 'பிஸ்கட் கொடுப்பது போல ரெட் கார்டுகளை கொடுக்கிறார்கள். இதை முதலில் நிறுத்த வேண்டும்'என கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதே வீடியோவில், கம்ருதீன் – பூர்ணிமா ரவி இருவரும் ஒரே மாதிரி இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களையும் சுட்டிக்காட்டி, 'நீ கம்ருதீன் போல இருக்கிறாயா?'  என்று பூர்ணிமாவை மாயா கிண்டல் செய்த காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த நகைச்சுவை கலந்த விமர்சனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Advertisement

Advertisement