• Apr 15 2026

திரையரங்க வெற்றிக்குப் பிறகு ஓடிடியில் ‘படையாண்ட மாவீரா’.. வெளியான அறிவிப்பு.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வீரக் கதைகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில், கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் தான் ‘படையாண்ட மாவீரா’. வி.கே. புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிகப் பிரமாண்டமாக தயாரித்த இந்த திரைப்படம், தற்போது ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி, மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.


‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றை மேற்கொண்டதுடன், நாயகனாகவும் நடித்துள்ளார் வ.கௌதமன். ஒரே படத்தில் பல பொறுப்புகளை ஏற்று, தனது திறமையை நிரூபித்துள்ளார்.

வீரம், தியாகம், மக்களுக்கான போராட்டம் ஆகிய கருப்பொருட்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், வரலாற்று பின்னணியுடன் கூடிய கற்பனை கதையமைப்பில் உருவாகியுள்ளது. கதையின் ஓட்டம் முழுவதும் நாயகனின் போராட்டமும், அவனது இலக்கும், சமூகத்தின் மீது அவன் கொண்டுள்ள பொறுப்புணர்வும் மையமாக காட்டப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். வீரத் தன்மையை வெளிப்படுத்தும் பின்னணி இசையும், உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு ஏற்ற மெலடி பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

Advertisement

Advertisement