• Feb 01 2026

‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியல் திடீர் நிறுத்தம்.! வெளியான அதிர்ச்சி தகவல்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சன் டிவியில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘எதிர்நீச்சல்’ சீரியல், மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு பெரிய மாற்றங்களை சந்தித்து 2024-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 

அதன் தொடர்ச்சியாக ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ என்ற பெயரில் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டாலும், முதல் பாகம் அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை.

ஒரே மாதிரியான கதைக்களம், தொடர்ந்து வரும் கொலை, கடத்தல் போன்ற காட்சிகள் மற்றும் டிஆர்பி சரிவு காரணமாக சீரியல் மீதான ஆர்வம் குறைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. 


இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான பின்னர், அதன் மறு ஒளிபரப்பு தினசரி காலை 8.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதனை நிறுத்த சன் டிவி முடிவு செய்துள்ளதாம். 

வருகிற பிப்ரவரி 2-ந் தேதி திங்கட்கிழமையில் இருந்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறு ஒளிபரப்புக்கு மிக மோசமான டிஆர்பி ரேட்டிங் கிடைத்து வந்ததால் சன் டிவி இந்த முடிவை எடுத்துள்ளதாம். இதனால் இனி இரவு 9.30 மணிக்கு மட்டுமே எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement