• May 05 2026

செந்திலை சொட்டை சொட்டைன்னு சொன்னாங்க... நான் தான் மாத்தினேன்.! பாக்யராஜ் விளக்கம்

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ், தனது சமீபத்திய பேட்டியில் திரையுலகின் வரலாற்று சூழல் குறித்த  அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.


பாக்யராஜ் கூறியதாவது, “நான் சினிமாவுக்கு வராத காலத்தில், நாடக நடிகர்கள் செந்திலை 'டேய் சொட்ட' என ஒருமையில் அழைத்து டீ வாங்கி வரச் சொல்லி அவமானப்படுத்துவார்கள். அதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. எனக்கு ஒரு வாய்ப்பு வந்த போது அவருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன்.”

"பின் 'மெளனகீதங்கள்', 'இன்று போய் நாளை வா' போன்ற படங்களில் வாய்ப்புக் கொடுத்தேன். அதன் பிறகு அவர் ஒரு பெரிய நடிகரா மாறியதும் எல்லாரும் அவருக்கு மரியாதையை கொடுக்க ஆரம்பித்தனர். அது செந்திலுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது." என்று கூறியுள்ளார். 

இந்த கருத்து, தமிழ் திரையுலகில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவது முக்கியம் என்பதை உணர்த்துகிறது. செந்திலின் கதையால், புதிய நடிகர்கள் அதிகாரிகளின் வழிகாட்டலுடன் சாதனை படைக்கலாம் என்பதை அறியமுடிகிறது. 

Advertisement

Advertisement