• May 05 2026

திருமணத்துக்குப் பிறகு பெயர் மாற்றமா? சமந்தாவின் அதிரடி முடிவு.! என்ன தெரியுமா.?

shali / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா ரூத் பிரபு, மீண்டும் தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக செய்திகளில் இடம்பிடித்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிதிமோருவை இரண்டாவது முறையாக திருமணம் செய்துக்கொண்ட பின்னர், சமந்தா தனது குடும்பப் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதாவது, இதுவரை “சமந்தா ரூத் பிரபு” என்ற பெயரில் அறியப்பட்டு வந்த நடிகை, இனி “சமந்தா நிதிமோரு” என்ற பெயரை பயன்படுத்துவார் எனக் கூறப்படுகிறது. இந்த தகவல், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா – ராஜ் நிதிமோரு திருமணம், கோயம்புத்தூரில் உள்ள ஈஷா அறக்கட்டளையில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட அமைதியான முறையில் நடைபெற்றது. பிரம்மாண்டம் இல்லாமல், ஆன்மிக சூழலில் நடைபெற்ற இந்த திருமணம், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

திருமணத்திற்குப் பிறகு, சமந்தாவும் ராஜ் நிதிமோருவும் தங்களது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையின் தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது. இந்நிலையில், சமந்தா தனது கணவரின் குடும்பப் பெயரை ஏற்றுக்கொள்ளும் முடிவு, ஒரு புதிய வாழ்க்கை தொடக்கத்தின் அடையாளம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

Advertisement

Advertisement