தமிழ் சினிமாவில் 2000-களின் தொடக்கத்தில் வெளிவந்த “நட்புக்காக” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வித்தியாசமான இடத்தை பிடித்திருந்தது.
சமீபத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு நேர்காணலில், “நட்புக்காக” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காலத்தைப் பற்றிக் கூறியதோடு அப்போது நடிகர் சரத்குமார் சந்தித்த அரசியல் சூழ்நிலை குறித்தும் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியதாவது," "நட்புக்காக" படப்பிடிப்பின் போது சரத்குமார் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அந்தத் துக்கத்தில் அவர் படப்பிடிப்பிற்கு வரமாட்டார் என்று நினைத்து 'பேக்கப்' செய்ய யோசித்தோம்.
ஆனால், சொன்னபடி சரியான நேரத்திற்கு வந்து நின்றார். 'அது வேற இது வேற' என்று கூறி தனது கடமையை செய்தார். அன்று அரசியலில் தோற்றாலும், "நட்புக்காக" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது." என்று தெரிவித்திருந்தார்.
இது உண்மையில், நடிகர் தனது அரசியல் தோல்வியால் பாதித்தாலும், தொழில்முறை கண்ணோட்டத்தில் தனது பணியை சிறப்பாக முடித்ததை நிரூபித்துள்ளது.
Listen News!