• Apr 15 2026

விஜய் சேதுபதியின் "காந்தி டாக்ஸ்" படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா.? பாக்ஸ் ஆபிஸ் விபரம்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான முயற்சிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி, மீண்டும் ஒரு புதுமையான திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ (Gandhi Talks) திரைப்படம் நேற்று (ஜனவரி 30, 2026) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல தொடக்கத்தை பதிவு செய்துள்ளது.


‘காந்தி டாக்ஸ்’ படத்தில் விஜய்சேதுபதியுடன், முன்னணி நடிகர் அரவிந்த் சாமி மற்றும் நடிகை அதிதி ராவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூவரின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இசை அமைப்பை இசையுலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொண்டுள்ளார். வசனமே இல்லாத ஒரு மௌனப் படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில், ரஹ்மானின் இசை படத்தின் ஆன்மாவாக அமைந்துள்ளது.

‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தை பதிவு செய்துள்ளது. கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்தியா முழுவதும் முதல் நாளில் சுமார் 1.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement