• Apr 15 2026

விஜய்யை அரசியல்வாதியா பார்க்கல... ஆனா, இது வருத்தமா இருக்கு.! குஷ்பு வேதனை

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் எப்போதும் வெளிப்படையான கருத்துகளை முன்வைக்கும் நடிகை மற்றும் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் பயணம் குறித்து முக்கியமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். குஷ்புவின் இந்த பேட்டி தற்போது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.


செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடுவதால் NDA கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் அதன்போது, “விஜய்யால் NDA கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. அவர் இனி நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டார். அது தான் எனக்கு ஒரு பாதிப்பு. அவரை நான் அரசியல் வாதியா பார்க்கல. என்னோட தம்பியாத் தான் பார்க்கிறேன். அவர் எங்க இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள். அவரு முதலமைச்சரா வாறதுக்கு இன்னும் நேரம் இருக்கு.”என்று தெரிவித்தார்.

இதன் மூலம், விஜய் அரசியல் களத்தில் இறங்கியதற்காக அல்ல, அவர் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்ததே தன்னை பாதித்ததாக குஷ்பு கூறியுள்ளார். இந்த வார்த்தைகள் தற்பொழுது தளபதி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement