சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான படம் ‘கங்குவா’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் பெரிய தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சில ரசிகர்களுக்கு அது ஃபேவரிட் படமாக அமைந்தது.
இதன் பின்னர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருந்த ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா இணைவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த படமே தற்போது ‘கருப்பு’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கு முதலில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என தகவல் வெளியான நிலையில், பின்னர் சாய் அபயங்கர் இசையமைப்பாளர் என அறிவிக்கப்பட்டது மற்றொரு சர்ப்ரைஸாக அமைந்தது. ‘கருப்பு’ படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு காரணமாக ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில், நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் பற்றிய முதல் விமர்சனம் தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக படத்தில் பணியாற்றியவரே நேரடியாக கருத்து தெரிவித்திருப்பது, எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

அதன்படி, கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கருப்பு திரைப்படத்தை பார்த்தேன். உங்கள் காத்திருப்பு வீண்போகாது' என்று பதிவிட்டுள்ளார்.
பொதுவாக படம் வெளியாகும் முன்பு, அதில் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் கருத்து தெரிவிப்பது வழக்கம். குறிப்பாக அனிருத் இப்படிப்பட்ட பதிவுகளை அடிக்கடி வெளியிடுவார். தற்போது அதே பாணியை சாய் அபயங்கரும் பின்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், ‘கருப்பு’ திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே நல்ல நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சூர்யா தற்போது ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘ஆவேசம்’ பட இயக்குநர் இயக்கத்திலும் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!