பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் தனது திரைப்படங்களின் உரிமைகள் மற்றும் சொத்துக்களை பற்றி சமீபத்தில் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். "எந்திரன்" படத்தின் கதையின் உரிமையாளர் என்று அறிவிக்கக்கோரிய ஆரூர் தமிழ்நாடனின் மனுவை சென்னையின் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நேற்றைய தினம் இவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யபட்டிருந்ததாக வெளிவந்த செய்திக்கு தற்போது இயக்குநர் பதிலளித்துள்ளார். அவர் "எந்திரன் படக்கதையின் உரிமையாளராக அறிவிக்கக்கோரிய ஆரூர் தமிழ்நாடனின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது; ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் சொத்துக்களை முடக்கியுள்ளது ED; தங்கள் நடவடிக்கையை ED திரும்பப்பெறாவிட்டால், மேல்முறையீடு செய்யப்படும்" என கூறியுள்ளார்.
இந்த தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இயக்குநரின் உரிமைகள் மற்றும் சொத்துக்கள் மீதான சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கின் தொடர்ச்சி மற்றும் இறுதி தீர்மானம் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
Listen News!