• Jan 20 2025

மணிமேகலையிடம் ஷாலினி வைத்த ரிக்வெஸ்ட்..! உடனே விக்கை கழட்டி நீட்டிய பிரியங்கா

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களின் ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது கலகலப்பாக நடைபெற்று வருகிறது.

குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனில் பங்கு பற்றிய  போட்டியாளர்களுள் பலராலும் ரசிகப்படும் ஒரு நடிகை தான் ஷாலினி ஜோயா. இவர் மலையாள நடிகையும் இயக்குனரும் ஆவார்.

இந்த நிகழ்ச்சிக்கு வர முன் அவர் பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசனின் காதலி என அறியப்பட்டார். அதற்கு பின் தற்போது விஜய் டிவியில் கலக்கி வருகின்றார்.

இவர் மலையாளமென்பதால் தமிழில் கதைக்கும் போது தெளிவின்மையும் இவரது க்யூட் ரியாக்ஷனும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றது. தற்போது ஷாலினி ஜோயாவுக்கு என்று தனித்தனி ஃபேன்ஸ் பேஜ் காணப்படுகிறது.


இந்த நிலையில், இந்த வாரம் இடம்பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலையிடம் ரிக்வெஸ்ட் ஒன்றை முன் வைத்துள்ளார் ஷாலினி ஜோயா.

அதன்படி அவர் மணிமேகலையிடம் கூறுகையில், தான் நிற்கும் இடத்தில் அதிக காற்று என்பதால் தனது ஹேர் ஸ்டைல் கலைந்து விடும். அதனால் தற்காலிகமாக திவ்யாவை அந்த இடத்தில் விடும்படி கேட்டுள்ளார்.

அந்த இடத்தில் நின்ற பிரியங்கா, இப்ப அவளுக்கு என்ன பிரச்சனையாம்? முடி கலையுதாமா என்று கேட்டுட்டு உடனே தனது தலைமுடியில் இருந்த ஒரு பிக்கை எடுத்து நீட்டியுள்ளார். 

இதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியாகி விழுந்து விழுந்து சிரித்துள்ளார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement