தொழில்நுட்ப வளர்ச்சி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதே நேரத்தில், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், ஒரு பிரபல சீரியல் நடிகர் செந்தில் வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் ரூ.15,000 இழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் தனது துயர அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
சீரியல் நடிகர், ஒரு ஹோட்டல் உரிமையாளரிடமிருந்து மெசேஜ் பெற்றதாக கூறுகிறார். அதில்,அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறியிருந்தார். மேலும் நம்பகத்தன்மை உணர அந்த போனில் ஹோட்டல் உரிமையாளரின் உண்மையான பெயர் மற்றும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. GPay ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முறையை பயன்படுத்தி பணம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
நடிகர் எந்த சந்தேகமும் கொள்ளாமல், ரூ.15,000 அனுப்பிவிட்டார். பின்னர் உண்மையான ஹோட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டபோது, அது தனது பெயரில் நடத்தப்பட்ட மோசடி என்றவுடன் அதனை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
மோசடியால் மிகுந்த மனவேதனை அடைந்த நடிகர், “அழுகிறதா, சிரிக்கிறதா என தெரியவில்லை” என தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் குறித்து பகிர்ந்த அவர், மற்றவர்களும் இதுபோன்ற சூழ்நிலைகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Listen News!