அஜித்தை எப்படியும் அரசியல் படங்களுக்கு கொண்டு வந்து விடுவேன் என இயக்குனர் செல்வராகவன்
சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சில அரசியல் சம்பந்தப்பட்ட
கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தது மட்டுமின்றி அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கும் வந்துவிட்டார் என்பதும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற
உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட உள்ளார்
என்பதும் தெரிந்தது.
ஆனால் விஜய்யின் போட்டியாளர் என்று கருதப்படும் அஜித், அரசியல் பக்கமே செல்வதில்லை என்பதும் குறிப்பாக அரசியல் கதையம்சம் கொண்ட படங்களில் கூட அவர் நடிக்க
தயங்குவது உண்டு என்றும் கூறப்படுவதுண்டு.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் அளித்த பேட்டியில் அஜித் படத்தை இயக்குவதற்கு தனக்கு மூன்று முறை வாய்ப்பு கிடைத்ததாகவும்,
ஆனால் ஒரு சில காரணங்களால்
அவரது படத்தை இயக்க முடியவில்லை என்றும் குறிப்பாக ஒரு அட்டகாசமான அரசியல்
கதை அவருக்காக தயார் செய்து வைத்திருந்தேன் என்றும் அந்த படத்தை இயக்க
முடியாமல் போனது எனக்கு பெரும் அதிருப்தி என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அஜித் படத்தை மிக விரைவில் இயக்குவேன்
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும், ஒரு அட்டகாசமான அரசியல்
கதையில் அஜித் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றும்
அவர் கூறியுள்ளார். அவர் சொல்வதை பார்க்கும்போது
அஜித்தை எப்படியாவது அவர் அரசியல் கதையில்
நடிக்க வைத்து விடுவார் என்று சவால் விடுவது போல் இருக்கிறது.
ஆனால் அஜித் அரசியல் கதையில் நடிப்பாரா? குறிப்பாக செல்வராகவனின் கதையில் நடிப்பாரா? அரசியல் என்றாலே விலகி போகும் அஜித்துக்கு அரசியல் கதை ஒத்து வருமா?
என்பதை எல்லாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!