தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான இளைய தளபதி விஜய் அரசியலிலும் கால் பதித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு மாநாடுகளை நடத்தியுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்றைய தினம் நடத்தப்படுகின்றது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த விஜய் ரசிகர்கள் மாநாட்டுக்குச் செல்லும் வழியிலேயே இரவு தங்கி உள்ளதோடு, தொண்டர்களும் ரசிகர்களும் இன்று அதிகாலை முதலே படையெடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது மாநாடு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ரசிகர்களும் தொண்டர்களும் அதிகமாக குழுமியதால் ஒரு சில பிரச்சனைகளும் ஏற்பட்டது.
ஆனால் இம்முறை சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை எதிர்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 3 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் குழுமி உள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு சென்ற தொண்டர்கள் சீமான் ஒழிக.. சீமான் ஒழிக.. என்று கத்தி கூச்சலிட்டுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.
இதன்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் சீமான் ஒழிக.. என்று கூச்சலிட்டதோடு சீமான் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார். பெண்களை ஏமாற்றுகின்றார். இதனால் சீமானை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று கூறியுள்ளனர்.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தனது உழைப்பால் உயர்ந்தவர். எங்களுடைய கட்சியில் படிப்பறிவு மிக்கவர்களும் பகுத்தறிவு உள்ளவர்களும், சமூகப் பொறுப்புள்ள இளைஞர்களுமே காணப்படுகின்றார்கள். ஆனால் சீமான் கட்சியில் உள்ளவர்களை மந்தமாக்குகின்றார் என்று தெரிவித்துள்ளனர்.
Listen News!