நடிகர் நாகார்ஜுனா மகன் நடிகர் நாகசைதன்யா சோபிதா துலிபாலா திருமணம் சீக்கிரமே நடைபெற உள்ளது. அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மெஹந்தி கொண்டாட்டத்துடன் திருமண விழா ஆரம்பமானது.
முதலில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்த நாகசைதன்யா சில மனக்கசப்புகள் காரணமாக விவாகரத்து பெற்றார். இந்த பிரிவு வலியில் இருந்து சமந்தா இன்னும்வெளிவரவில்லை. இருப்பினும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு ஜூம் நேர்காணல் ஒன்றில், சோபிதா பற்றிய பல தகவல்களை பகிர்ந்திருந்தார், நாகசைதன்யா. அதில், “சோபிதா ஒரு குடும்ப பெண். எங்கள் குடும்பங்கள் ஒன்றாக இருப்பதை பார்ப்பதற்கு அழகாக உள்ளது. மேலும் பாரம்பரியத்தை பொறுத்த அளவில், இருவரின் பாரம்பரியமும் ஒரே மாதிரி உள்ளது. அதனால் தான் திருமணம் செய்ய முடிவு எடுத்தோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த சமந்தா ரசிகர்கள் "சமந்தா குடும்பத்தில் இருந்து வந்த பெண் இல்லையா? அவர் உங்கள் குடும்பத்துக்கு ஏற்ற பெண் இல்லை என்றால், ஏன் திருமணம் செய்தீர்கள்? ஆரம்பத்திலே, தெளிவாக பேசி பிரிந்து இருக்கலாமே..” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நாகா சைத்தானியா -சோபிதா இவர்கள் திருமணத்துக்கு வாழ்த்துக்களை விட வசைபாடல் தான் அதிகமாக வந்துகொண்டு இருக்கிறது.
Listen News!