• Jan 19 2025

மணிமேகலைக்கு தான் இன் செக்யூரிட்டி.. உண்மை வெல்லும்..!! பிக் பாஸ் பிரபலத்தின் ஆவேச பதிவு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை மணிமேகலை மற்றும் ரக்சன் ஆகிய தொகுத்து வழங்கி வந்தார்கள். ஆனாலும் மணிமேகலை இந்த சீசனில் குக்காக உள்ள ஒரு தொகுப்பாளினி, தனது வேலையை செய்ய விடாமல் இடையூறு செய்வதாகவும் அடிக்கடி அவர் தனது வேலையை மறந்து போவதாகவும் இதனால் தான் குக் வித் கோமாளி இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இந்த காரணத்தினால் இதற்கு காரணம் பிரியங்கா தான் என அவருக்கு எதிராக பலர் தமது கருத்துக்களை முன்வைக்க தொடங்கினார்கள்.

அத்துடன் விஜய் டிவியில் பிரியங்கா அதிகமாக ஆதிக்கம் செலுத்துவதாகவும் அவர் வந்த பிறகுதான் அதிகமான தொகுப்பாளர்கள் காணாமல் போனதாகவும் பலர் குற்றச்சாட்டை முன் வைத்தார்கள். மேலும் மணிமேகலைக்கு ஆதரவாக பிரபல பாடகி சுசித்ரா, அனிதா சம்பத், ஐஸ்வர்யா தத்தா உட்பட பலர் ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்கள்.

அதேபோல பிரியங்காவுக்கு ஆதரவாக பலர் தமது கருத்துக்களை முன்வைத்ததோடு அவருக்கு ஆதரவாக உள்ள பல வீடியோக்களை மீண்டும் வைரல் ஆக்கி வருகின்றார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் ஷோவில் பிரியங்காவுக்கு மிக நெருக்கமான பவானி ரெட்டி தற்போது சர்ச்சை பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


அதாவது மணிமேகலைக்குத்தான் இன் செக்யூரிட்டி (தன் வேலை போயிடுமோ என்ற பயம்) பிரியங்கா ஒன்று டாமினேட் ஆக இல்லை.உண்மை வெல்லும் என தற்போது பவானி ரெட்டி பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்.

மேலும்  பிரியங்காவும் பவானி ரெட்டியும் பிக் பாஸில் இருந்தே மிகவும் நெருக்கமானவர்கள் என்பதோடு பவானியும் அமீரும் காதலிக்க முக்கியமான காரணமே பிரியங்கா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement