• Sep 19 2024

ராஜ வசூலில் சொல்லியடித்த கில்லி நம்ம தளபதி..! தெறிக்கவிட்ட கலெக்சன் இதோ..

Aathira / 23 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில்   வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதோடு அவருடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், லைலா, ஜோகி பாபு, சினேகா, பிரேம்ஜி, மோகன், கனிகா, மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ஏஐ டெக்னாலஜி ஊடாக விஜயகாந்தை காட்டியிருப்பார்கள். இது ரசிகர்களுக்கு மிகுந்த கொண்டாட்டத்தை கொடுத்தது.

இதைத்தொடர்ந்து கோட் திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே உலக அளவில் சுமார் 126 கோடிகளை வசூலித்திருந்தது. இதன் காரணத்தினால் பட குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் காணப்பட்டார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் கலவையாக விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். மேலும் விஜய் தனது 69 வது படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட இருப்பதால் மிகுந்த வேதனையிலும் காணப்படுகின்றார்கள் விஜய் ரசிகர்கள்.


இந்த நிலையில், கோட் திரைப்படம் வெளியாகி 13 நாட்களை கடந்த நிலையில் அதன் மொத்த வசூலை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.

அதன்படி கோட் திரைப்படம் இதுவரையில் 413 கோடிகளை வசூலித்து உள்ளது. இந்த தகவலை அதிகாரவபூர்வமாக வெளியிட்டு உள்ளார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement