• Jan 19 2025

நான் அப்பாவாகிவிட்டேன்.. எங்க வீட்டுக்கு மகாலட்சுமி வந்திருக்காங்க.. ’சத்யா’ சீரியல் நடிகர்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் சேனலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ’சத்யா’ சீரியலில் நடித்த நடிகருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் அப்பாவாகிவிட்டேன், எங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வந்து இருக்காங்க’ என்று மகிழ்ச்சியுடன் செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷ்ணு மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்த ’சத்யா’ என்ற சீரியல் ஜீ தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது என்பதும், இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் இந்திரன். இவர் நாயகன் விஷ்ணுவின் நண்பராக நடித்திருந்தார் என்பதும் இவரது காட்சிகள் சிறப்பாக இருந்ததை அடுத்து இந்த சீரியல் மூலம் இவர் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷிவன்யா என்ற பெண்ணை காதலித்து இந்திரன் திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் நான் அப்பாவாகிவிட்டேன் என்றும் எங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வந்துவிட்டார் என்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சத்யா சீரியலுக்கு பின்னர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மலர்’ என்ற சீரியலில் இந்திரன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement