• Mar 16 2026

சன் டிவி சூப்பர்ஹிட் சீரியலில் நடித்துள்ளாரா ஐஸ்வர்யா மேனன்? அட இது எப்ப நடந்தது?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவி சீரியலில் நடித்துள்ளதாக வெளிவந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’தீயா வேலை செய்யணும் குமாரு’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன்.  இவர் தமிழில் மட்டுமின்றி சில மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் தற்போது கூட அவர் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய அளவில் தற்போது பிரபலமாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் ஒரு காலத்தில் அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ’தென்றல்’ சீரியலில் ஒரு சிறு கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் இருந்து தெரிய வருகிறது.

ஏற்கனவே த்ரிஷா, ஜோதிகா உள்பட பல நடிகைகள் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து அதன் பின் தான் பிரபலமானார்கள் என்ற நிலையில் ஐஸ்வர்யா மேனனும் ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் அப்படி ஒரு கேரக்டரில் நடித்தது தான் ’தென்றல்’ சீரியல் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

ஐஸ்வர்யா மேனன் கடந்த 2009 ஆம் ஆண்டு ’தென்றல்’ சீரியலில் நடித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இது ஐஸ்வர்யா மேனன் தானா என்பதை நம்பவே முடியவில்லை என்று கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement