• Oct 04 2024

ஓணம் பண்டிகையில் செம வைப் காட்டும் சூப்பர் ஸ்டார்.. வைரலாகும் வீடியோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை தொடர்ந்து தற்போது கூலி படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார். இதற்கு அனிருத் இசையமைக்கின்றார். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து வெளியான மனசிலாயோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் கூலி படத்தில் இணைந்துள்ள நடிகர்களின் போஸ்டர்கள் அவர்களுடைய பெயர்களுடன் வெளியானது. கடந்த சில தினங்களாகவே குறித்த போஸ்டர்கள் தான் இணையத்தை ஆட்சி செய்து வந்தன. இந்தப் படத்தில் மலையாள நடிகரான சௌபின் ஷாஹிர் முதல் முறையாக தமிழ் சினிமாவில் என்ட்ரியாகி  உள்ளார்.


மேலும் சுமார் 38 ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ் கூலி படத்தில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டுகளில் சத்யராஜ், ரஜினி சேர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் இவர்கள் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பு உருவாகவில்லை.

இந்த நிலையில், இன்றைய தினம் கலை கட்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பு பணியின் போது டான்ஸ் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். தற்போது குறித்த வீடியோவை வெளியிட்ட படக் குழுவினர் ஓணம் பண்டிகையை உற்சாகமாக செலிபரேட் பண்ணி வருகின்றார்கள். 


Advertisement

Advertisement