• Mar 26 2026

பிக்பாஸ் பிரதீப் ஹீரோவாக நடிக்கும் படம்.. பிரபல தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரதீப் அந்தோணி பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளராக இருந்த பிரதீப் அந்தோணியை மாயா, பூர்ணிமா புல்லிங் குரூப் சதி செய்து வெளியேற்றி விட்டது என்பதும் அவர்களது சதியை புரிந்து கொள்ளாமல் கமலும் அவர் மீது பழி சுமத்தி வெளியேற்றினார் என்பதும் தெரிந்தது.

இந்த நிகழ்ச்சியிலிருந்து மிகக்குறைந்த நாட்களில் வெளியேற்றப்பட்டாலும் பிரதீப் அந்தோணிக்கு பார்வையாளர்களின் ஆதரவு குவிந்தது என்பதும் அவர் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இருந்தால் கூட கிடைக்காத ஆதரவு அவர் வெளியே போனவுடன் கிடைத்தது என்பதையும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.



இந்த நிலையில் பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக சமீபத்தில் பிரதீப் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் தற்போது மூன்றாவது ஆக பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த படத்தை முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பிரதீப் ஒரு படத்தை இயக்குவதற்கு திரைக்கதை எழுதி வருவதாகவும் தெரிகிறது.

Advertisement

Advertisement