• Dec 19 2025

சரத்குமார்- சண்முகபாண்டியன் நடிப்பில்! ஆக்‌ஷன் திரைப்படம்! தலைப்புடன் வெளியான போஸ்டர்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அடுத்ததாக புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து இருக்கிறார். முக்கிய வேடத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்துள்ளார். 'கொம்பு சீவி' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தது. 


இரண்டு நடிகர்களையும் அதிரடியான, மாஸ் அவதாரத்தில் காட்சிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ஆன்லைனில் ட்ரெண்டிங்கில் உள்ளது. கொம்பு சீவி 1996 ஆம் ஆண்டு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி மற்றும் வைகை அணை ஆகிய பகுதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.


 நிஜ வாழ்க்கை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த போஸ்டர்


Advertisement

Advertisement