• Jan 18 2025

தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் ஷேர்... வேட்டையனை சீண்ட கேக் வெட்டி கொண்டாட்டமா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்து வரும் மிக முக்கியமான நடிகர் தான் இளையதளபதி விஜய். இவர் நடிப்பில் இறுதியாக கோட் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் சினேகா, லைலா, பிரேம்ஜி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், ஜோகி பாபு, மீனாட்சி சவுத்ரி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மேலும் இந்த படத்தில் கேமியா ரோலில் சிவகார்த்திகேயனும் மட்ட என்ற பாடலுக்கு திரிசாவும் நடனமாடி இந்த படம் மீதான எதிர்பார்ப்பை எகிற  வைத்திருந்தார்கள்.

கோட் படத்தில் விஜய் இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் ஏஐ டெக்னாலஜி ஊடாக சமீபத்தில் உயிரிழந்த விஜய காந்திற்கும் உயிர் கொடுத்து இருந்தனர். அத்துடன் இந்த படத்தில் இடம்பெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசையும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து கோட் திரைப்படம் 45 கோடிகளை வசூலித்து இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாகவே அறிவித்திருந்தது. கோட் படம் வெளியாக முன்பே தமக்கு லாபம் ஈட்டி தந்ததாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா பேட்டி ஒன்றின் போது கூறியிருந்தார்.


இந்த நிலையில், தற்போது கோட் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வரை ஷேர் ஆகி இருப்பதாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதில் விஜய் கேக் வெட்டி படக்குழுவினருக்கு ஊட்டிய காட்சிகள் பெரிதும் வைரலாகி உள்ளன.

இதை வேளை தற்போது ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், கோட் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement