நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் வரலட்சுமி திருமணம் முடிந்த சில நாட்களில் சரத்குமார் ஒப்புக்கொண்ட ஒரு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தேவயானி நடிக்க இருப்பதாக தகவல் வழியாக உள்ளன.
நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை ’8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் சரத்குமார் மற்றும் தேவயானி இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ’சூரிய வம்சம்’ என்ற திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் தேவயானி கணவன் மனைவியாக நடித்த நிலையில் தற்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரத்குமார் ஜோடியாக தேவயானி நடிக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடித்த இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மணிகண்டன் நடித்த ’குட் நைட்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மீதா ரகுநாத் மற்றும் இன்னொருவர் கன்னட நடிகை சைத்ரா அச்சார் ஆகியோர் இணைந்துள்ளனர். இருவருமே சித்தார்த் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இன்னும் சில பிரபலங்கள் இணைய இருப்பதாகவும் விரைவில் இது குறித்து தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Listen News!