• Dec 04 2024

ஒரு பாட்டுக்கு இத்தனை கோடி! புஷ்பா 2- ஸ்ரீ லீலா வாங்கிய சம்பளம்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் அல்லு அர்ஜுன், நடிகர் ராஷ்மிக்கா மந்தனா நடிப்பில் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் சினிமா திரையுலகில் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா ஊ சொல்லுறியா மாமா என்ற ஒரு பாடலுக்கு அல்லு அர்ஜூனுடன் ஆடி இருப்பார். இந்த பாட்டு பட்டிதொட்டி எங்கு பேமஸாகி படம் வெற்றி பெற இந்த பாட்டும் ஒரு காரணமாகிவிட்டது. 


இந்நிலையில் இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அப்டேட்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. இதனிடையே படம் ஒன்றில் சமந்தா ஆடியது போல பாகம் இரண்டில் நடிகை  ஸ்ரீலீலா நடனமாடி இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இப்பாடல் உலகளவில் கொண்டாடப்பட்ட நிலையில், புஷ்பா 2 படத்திலும் அதே போல் ஒரு பாடலை இசையமைத்துள்ளார்.

d_i_a


இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நேற்று படக்குழு வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில்  சமந்தா புஷ்பா 1ல் 5 கோடி வாங்கிய நிலையில் ஸ்ரீ லீலா புஷ்பா 2 படத்தில் நடனமாட ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என  சொல்லப்படுகிறது. இந்த பாடல் வெளியிட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement