• Dec 03 2024

கர்ப்பமானா விட்டு போவியா? லவ் சொல்ல முதல் அதுதான் நடந்துச்சு..! மரியா சொன்ன சீக்ரெட்?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பென்சில் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவன் தான் ஷாரிக். இவர் இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு படங்களில் கிடைக்காத பிரபலம் இவருடைய  திருமணத்தின் மூலம் கிடைத்தது.

நடிகர் ஷாரிக் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதற்கு காரணம் மரியா 9 வயது மகளுடன் வாழ்ந்து வந்தது தான். இந்த திருமணத்திற்கு அப்பா ரியாஸ்கான் மற்றும் அவருடைய மனைவி ஒப்புதல் அளித்து பிரம்மாண்டமாக திருமணத்தை செய்து வைத்தார்கள்.

சென்னையில் இவர்களுடைய திருமணம் கிறிஸ்தவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடத்தப்பட்டுள்ளது. மரியாவிற்கு தாலி கட்டி தன்னுடைய மனைவி ஆக்கி உள்ளார் ஷாரிக்.. இந்த ஜோடி தற்போது பலரையும் கவர்ந்துள்ளது.

d_i_a

இந்த நிலையில், ஷாரிக்-  மரியா ஜோடி சமீபத்தில் அளித்த பேட்டியில் மேலும் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார்கள். அதில் மரியாவை ஜிம்மில் பார்த்தவுடன் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் காதல் தோன்றியதாக ஷாரிக் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


தங்களுடைய காதல் தொடர்பில் பல கமெண்ட்ஸ்கள் வெளியான போது தனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை கொடுத்ததாக மரியா கூறியுள்ளார். ஆனாலும் அதை எதிர்கொள்வதற்கு ஷாரிக் உதவி செய்ததாகவும் தன்னைப் பற்றிய பேட் கமெண்ட்ஸ்களை தனது மகள் கேட்கக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னை காதலித்தாலும் தன்னிடம் நேரடியாக காதலை ஷாரிக் சொல்லவில்லை. ஒரு வாரத்திற்கு பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ள நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளாராம். 

அதற்கு பிறகு தான் கர்ப்பமாகும் சூழலில் கர்ப்பமாகி விடுவேன் அப்போது தன்னை விட்டு போய் விடுவாயா என்று கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். தற்பொழுது இவர்கள் வழங்கியிருக்கின்றது.


 

Advertisement

Advertisement