• Dec 07 2024

விஜயா வீட்டில் புதிதாக வெடித்த பூகம்பம்.. பலிகாடான சீதா..?? உடனடியாக முத்து எடுத்த முடிவு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை விஜயாவிடம் சத்யாவுக்கு கொடுத்த போலீஸ் கம்பளைண்டை வாபஸ் வாங்குமாறு சொல்லுகின்றார். ஆனாலும் தான் எதற்காக வாங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கின்றார் விஜயா.

எனினும் அண்ணாமலை இவ்வளவு சொல்லியதால் தான் சத்யாவின் போலீஸ் கம்பளைண்ட் வாபஸ் வாங்குகின்றேன். ஆனால் அந்த வீட்டில் மீனாவும் முத்துவும்  இருக்கக்கூடாது வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று சொல்லுகின்றார். இதைக் கேட்ட அண்ணாமலை பிடிவாதமும் ஒரு வியாதி தான் என்று விஜயாவுக்கு சொல்லிவிட்டு செல்கின்றார்.

மறுபக்கம் வக்கிலிடம் சென்ற முத்து மீனாவிடம், அம்மா வாபஸ் வாங்கவில்லை என்றால் ஐந்து லட்சம் வரை செலவாகும் என்று அதிர்ச்சி கொடுக்கின்றார். அந்த நேரத்தில் சீதாவுக்கு பார்த்த மாப்பிள்ளை போன் பண்ணி எனக்கு இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லுகின்றான்.


முத்து திருமணத்துக்கு பிறகு இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்க, சீதாவை அம்மா வீட்டுக்கு அனுப்பி இருப்பேன் என்று சொல்லுகின்றார். இதனால் நீ என்னடா சொல்றது நாங்களே சொல்றோம் நீ வேணாம் என்று முத்து திட்டிவிட்டு ஃபோனை வைக்கின்றார்.

வீட்டுக்கு வந்த அண்ணாமலையிடம் முத்து என்ன நடந்தது என்று கேட்க, அண்ணாமலை முகத்தை வைத்து அத்தை சம்மதிக்கவில்லை என்று மீனா கண்டுபிடித்து விடுகின்றார். மேலும் ஏன் அத்தை இப்படி செய்கிறார்கள் என்று மீனாவுக்கு ஸ்ருதி சப்போர்ட் பண்ணி கதைக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement