• Dec 04 2024

ரொமான்ஸில் எல்லை மீறும் விஜய் டிவி சீரியல்... விஜய் - காவேரி இடையே இப்படியொரு நெருக்கமா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களுள் ஒன்றுதான் மகாநதி. இந்த சீரியல் புது முகங்களின் அறிமுகத்துடன் அதிரடியாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது மக்களுடைய வரவேற்பை பெற்று சிறப்பாக ஒளிபரப்பாக வருகின்றது.

இந்த சீரியலின் கதையை இயக்குனர் பிரவீன் பென்னட் கொண்டு சென்ற விதம் பலரையும் கவர்ந்துள்ளது. தற்போது இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றன.

மகாநதி சீரியலில் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பாக இருப்பது காவேரி விஜய் ஆகிய இருவரும் தங்களுடைய மனதில் இருக்கும் காதலை எப்போது வெளியே சொல்ல போகின்றார்கள் என்பதுதான். அதனை காவேரியின் பிறந்தநாள் அன்று சொல்ல வேண்டும் என்ற முடிவில் விஜய் காணப்படுகின்றார்.


இதற்கு இடையில் விஜயின் முன்னாள் காதலி வெண்ணிலாவை அழைத்து வந்து விஜய் முன் நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் வில்லன் காணப்படுகின்றார். இதனால் இந்த கதையில் அடுத்து என்ன  நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் டிவி  ஒளிபரப்பாகும் சீரியல்களில் அடுத்து வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளன. அதில் மகாநதி சீரியலில் இருந்து வெளியான ப்ரோமோவில் காவேரியும்  விஜயையும் ரொமான்ஸ் பண்ணும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும் இன்னொரு பக்கம் விஜய் டிவியில் ரொம்ப ஓவராகத்தான் ரொமான்ஸ் காட்சிகளை காட்டுகின்றார்கள் என தமது பதிவுகளை பதிவிட்டு வருகின்றார்கள்.


Advertisement

Advertisement