• Jan 19 2025

சின்ன மருமகள் ஸ்வேதாவுக்கு இப்படியொரு காதலர் இருக்கா? வெளியான க்யூட் வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் தமிழ்ச்செல்வியாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை ஸ்வேதா. இவர் சீரியலில் மிகவும் சாந்தமாக நடித்து வருகின்றார். ஆனாலும் அவருடைய ஒரிஜினல் கேரக்டர் அப்படி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

சின்ன மருமகள் சீரியலில் டாக்டர் ஆகும் கனவுடன் சுற்றி வரும் தமிழ்ச்செல்வி பிளஸ் டூ படிக்கும் போதே அவருக்கு பிடிக்காத திருமணத்தை செய்து வைத்து விடுகின்றார்கள். ஆனாலும் தன்னுடைய கனவை துரத்தும் நோக்கில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றார். இந்த சீரியலில் தமிழ்ச்செல்வியாக ஸ்வேதா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

d_i_a

சின்ன மருமகள் சீரியலில் தமிழ்ச்செல்விக்கு டாக்டராகும் கனவு  இருப்பது போலவே தனக்கும் சிறந்த நடிகையாக மாற வேண்டும் என்ற கனவுள்ளதாக சமீபத்தில் வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் செல்விக்கும் ஸ்வேதாவுக்கும் எந்தவித ஒற்றுமையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதன்போது அவருடைய பிறந்தநாளுக்கு யாரோ ஒருவர் சப்ரைஸ் பண்ணியது போல 'ஹாப்பி பர்த்டே உசுரே..' என டெக்ரேசன் பண்ணி ஸ்வேதாவுக்கு கேக் ஊட்டி விடுகின்றார்.

ஆனாலும் அது யார் என்பதை வீடியோவில் காட்டவில்லை. இதை பார்த்த ரசிகர்கள் இது சுவேதாவின் காதலராக தான் இருப்பார் என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். ஸ்வேதாவும் அதற்கு ஏற்றார் போலவே கேப்சன் போட்டு உள்ளமை பலரையும் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் ஸ்வேதாவின் பிறந்தநாளுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement