• Dec 06 2024

நான்கு வருஷமா கோமாவில் அவஸ்தைப்படும் சத்யராஜ் மனைவி! திவ்யா உடைத்த உண்மை

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் சத்யராஜ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடிகராக மட்டுமில்லாமல் வில்லன், குணச் சித்திர நடிகர், துணை நடிகர் என பல கேரக்டர்களையும் ஏற்று நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர் நடித்த படங்களில் அமைதிப்படை, வால்டர் வெற்றிவேல், கடலோரக் கவிதைகள் போன்ற படங்கள் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தன. இவரும் மணிவண்ணனும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு இன்று வரை மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும்  நடித்து வருகின்றார் சத்யராஜ். இவர் தெலுங்கு சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். தந்தையாக இவர் ஏற்கும் கதாபாத்திரங்களும் மிகவும் எமோஷனலாக காணப்படும்.

d_i_a

சத்யராஜுக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் மகளும் உள்ளார்கள். அதில் மகன் நடிகராக காணப்படுகின்றார். இவரும் பல படங்களில் நடித்துள்ளார். அவருடைய மகள் ஊட்டச்சத்து நிபுணராக காணப்படுகின்றார்.


இந்த நிலையில், சத்யராஜின் மகள் திவ்யா சமீபத்தில் அளித்த பேட்டி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தனது அம்மாவுக்கு PEG குழாய் மூலம் தான் உணவு வழங்கப்படுகின்றது. இதனால் மிகவும் மனம் உடைந்து போய்விட்டோம். எனினும் நம்பிக்கையோடு மருத்துவ முன்னேற்றத்திற்காக காத்திருப்பதாகவும் திவ்யா கூறியுள்ளார்.

மேலும் எனது அப்பா நாலு வருஷமாக சிங்கிள் பேரண்டாக உள்ளார். அப்பாவின் அம்மா சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அப்போதிருந்தே நானும் எனது அப்பாவுக்கு ஒரு அம்மாவாக உள்ளேன். அப்பாவும் நானும் ஒரு சக்தி வாய்ந்த சிங்கிள் மாம்ஸ் கிளப்பை உருவாக்குகின்றோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement