தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது அனைவருக்கும் ஷாக்கிங்கான விடையத்தை அறிவித்துள்ளார். முன்னணி கதாபாத்திரங்கள்,பல வெற்றி படங்கள், அதிக கெட்டப்புகள், ஏராளமான விருதுகள் என அனைத்திலும் பிரபலமானவர் இவர். அதனாலே உலக நாயகன் கமலஹாசன் என்ற விருதினையும் பெற்றார். அதிக ஆசிய விருது வாங்கிய தமிழ் நடிகரும் இவர்தான்.
இந்நிலையில் தற்போது தக் லைப் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் திரைப்பட அப்டேட் கொடுப்பார் என்று எதிர் பார்க்கபட்ட நிலையில் இனி இப்படி கூப்பிடவேண்டாம் என்று அறிவித்துள்ளார். அதாவது இனி தன்னை எந்தவித அடைமொழிகளும் இல்லாமல் அனைவரும் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கமல்ஹாசன் என்றோ அல்லது கமல் KH என்று மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று தெரிவித்துள்ளார்.
"என் மீது கொண்ட அன்பின் காரணமாக பலர் உலகநாயகன் உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறார்கள். இந்த பட்டங்களை நினைத்து நான் பெருமிதம் அடைகிறேன். மேலும் மேலே குறிப்பிட்ட பட்டங்களை வழங்கியவர்களுக்கு எந்தவித மரியாதை குறைவும் வந்து விடாத வண்ணம், அந்த பட்டங்கள் அனைத்தையும் துறப்பதே சிறந்தது" என்று கூறியுள்ளார்.
என் மீது கொண்ட அன்பால் உலக நாயகன் என்று என்னை அழைக்கிறீர்கள். எந்தவொரு தனி மனிதனையும் விட சினிமா கலை பெரியது. அதனால், பட்டங்களையும், அடைமொழிகளையும் துறக்க முடிவு செய்துள்ளேன். எனவே, என் மேல் அன்பு கொண்டவர்கள இனி என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக் கொள்கிறேன் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைகர் அஜித்கூட இனி தல என்று அழைக்க வேண்டாம் அஜித் அல்லது AK என்று அழையுங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கமலஹாசனும் இந்த முடிவை எடுத்துள்ளது ரசிகர்களுக்கு மிக வருத்தமாக உள்ளது.
உங்கள் நான்,
— Kamal Haasan (@ikamalhaasan) November 11, 2024
கமல் ஹாசன். pic.twitter.com/OpJrnYS9g2
Listen News!