நெப்போலியனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சினிமா பிரபலங்கள் குஷ்பூ, மீனா, சரத்குமார், ராதிகா, கலா மாஸ்டர் உள்ளிட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். தனுஷின் திருமணம் ஜப்பானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கடந்த நவம்பர் மாதம் ஏழாம் தேதி ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் தனுஷ் திருமணம் நடைபெற்றது. அவர் திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணத்திற்கு பல விமர்சனங்கள் இருந்த போதும் பலர் அவர்களை வாழ்த்தி இருந்தார்கள்.
d_i_a
இவர்களுடைய திருமண கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. அதிலும் தாலி கட்டும் போது தனுஷின் கைகளை பிடித்து அவருடைய அம்மா தான் அக்ஷயா கழுத்தில் போட்டுவிட்டார். இது பெரும் பேசும் பொருளானது. ஆனால் அதன் பிறகு அக்ஷயா வழங்கிய பேட்டியில் தான் முழு மனதுடன் தான் தனுஷை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.

நெப்போலியன் வழங்கிய பேட்டியலும் அக்ஷயாவின் குடும்பத்தினர் தம்மை 13 வருடமாக இணையத்தில் வெளியிடும் வீடியோக்கள் மூலம் பார்த்ததாகவும், தான் அக்ஷயாவிடம் முழு மனதுடன் தான் திருமண பண்ணுகிறாயா இல்லை யாரும் கம்பல் பண்ணுகிறார்களா என்று கேட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதற்கு அக்ஷயா தான் முழு மனதுடன் தான் தனுஷை திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு சின்ன வயதில் இருந்தே தனுஷை பிடிக்கும் எனவும் தெரிவித்ததாக குறிப்பிட்டு இருந்தார். இவ்வாறு அவர்களுடைய திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில், ஜப்பானில் நடைபெற்ற தனுஷின் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மீனா, ராதிகா, சரத்குமார் ஆகியோர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வந்துள்ளது. அதிலும் மீனாவும் சரத்குமாரும் பாட்டு ஒன்றுக்குரிய ரியசல் செய்வது போல வீடியோ ஒன்று எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.
                             
                            
                            
                            
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!