• Dec 04 2024

தனுஷுக்கு மீண்டுமொரு திருமணமா? நெப்போலியன் வழங்கிய பேட்டி படுவைரல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

நெப்போலியனின் மூத்த மகன் தனுசுக்கு ஜப்பானில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. பல விமர்சனங்களையும் தாண்டி தனது மகனுக்கு ஏற்ற பெண்ணை தேர்ந்தெடுத்து சிறப்பாக திருமணம் நடத்தி வைத்துள்ளார் நெப்போலியன். தற்போது இவர்களுடைய திருமணம்தான் இணையத்தில் ஹாட் டாபிக்காக வலம் வருகின்றது.

ஜப்பானில் நடைபெற்ற தமிழ் பாரம்பரிய திருமணம் நெப்போலியன் மகனது  திருமணம் தான் என பேசப்படுகின்றது. அந்த அளவுக்கு ஜப்பானையே வியக்க வைத்திருந்தார் நெப்போலியன். தனது மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட போதும் அதனை ஒரு காரணமாக கருதி அவரை ஒடுக்காமல் படிப்பிலும் வாழ்க்கையிலும் அவருக்கு உரிய கடமைகளை செய்து முடித்துள்ளார் நெப்போலியன்.

தனுஷின் மனைவி அக்ஷயா தாதியாக பணியாற்றியவர் என்பதால் அவர் தனுஷை நன்றாக கவனித்துக் கொள்ளுவார் என்ற நம்பிக்கையையும், அக்ஷயாவுக்கு  தனுஷை மிகவும் பிடிக்கும் என்பதால் எல்லாருடைய முழு சம்மதத்துடனும் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.


நெப்போலியன் தனது மகனின் திருமணத்திற்கு 150 கோடி வரை செலவழித்து இருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆனாலும் எல்லாம் மகனுக்காக தானே என்று நெப்போலியன் இந்த திருமணத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு சென்ற பிறகு அந்த நாட்டு சட்டத்தின் படி தனுஷ் அக்ஷயாவுக்கு இன்னொரு திருமணம் செய்ய உள்ளதாக நெப்போலியன் கூறியுள்ளார். தற்போது நெப்போலியன் வழங்கிய இந்த பேட்டி வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement