சமீபத்தில் 'மஞ்சள் வீரன்' திரைப்படம் தொடர்பாக நடந்த நேர்காணலில் நடிகை சனம் ஷெட்டி ஒரு கேள்விக்கு கடுமையாக பதிலளித்த வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நடிகர் கூல் சுரேஷ் பற்றி எழுந்த கேள்வி சனத்தின் கோபத்தை தூண்டியது.
ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில், கூல் சுரேஷுடன் எந்த ஹீரோயினும் நடிக்க விரும்ப மாட்டார்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதை கேட்டதும், அதிருப்தி அடைந்த சனம் ஷெட்டி உடனே "யார் அப்படி சொன்னது நான் கேக்கிறேன் அவர்களிடம் " எனக் கோபமாக பதிலளித்தார்.
இந்த கேள்வி அவரை கோபமடையச் செய்தது மட்டுமல்லாமல், "எனக்கு ஒரு நல்ல கதையோ, வாய்ப்போ இருந்தால், நிச்சயமாக கூல் சுரேஷ் அண்ணாவுடன் நடிப்பேன்!" என நக்கலாக கூறினார்.சனம் ஷெட்டியின் இந்தப் பதில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவருடைய தன்னம்பிக்கை மற்றும் உறுதி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், கூல் சுரேஷுக்கு கிடைத்த ஆதரவாக பலர் இதை பார்த்து "சனம் ஷெட்டி மாஸ்!" எனக் கருத்து தெரிவிக்கிறார்கள்.
'மஞ்சள் வீரன்' திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் இதுபோன்ற சர்ச்சைகள் படத்திற்கு நல்ல விளம்பரம் அளிக்கின்றன. சனம் ஷெட்டி தனது பதிலால், தனக்கு நேர்மையான மனநிலை இருப்பதை நிரூபித்துள்ளார்.
Listen News!