முன்னணி நடிகர் சூர்யா சினிமாவில் நடிப்பது மாத்திரமின்றி பொது சேவையிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர் தனது குடும்பத்துடன் இணைந்து அகரம் அறக்கட்டளை எனும் அப்பா அம்மாவினால் படிப்பிக்க முடியாத மாணவர்களுக்கு பண உதவி செய்து வருகின்றனர். சாதாரணமாக ஆரம்பிக்கபட்ட இந்த நிறுவனம் தற்போது ஒரு பெரிய புதிய அலுவலகம் ஒன்று அமைத்துள்ளனர்.
குறித்த அலுவலக திறப்பு விழாவிற்கு சூர்யா ,கார்த்தி ,சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர். குறித்த மேடையில் சூர்யா பேசும் போது இந்த நிறுவனம் வளர்வதற்கு உதவிய அனைவருக்கும் பெரும் மனதுடன் நன்றி தெரிவித்துள்ளார். இந்த அகரம் நிறுவனத்தின் மூலம் இன்று படித்து உயர்ந்து பல மாணவர்கள் டாக்டர் ,இன்ஜினியர் ஆகியுள்ளனர் இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதைவிட சூர்யா "சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட.. இந்த விழா ரொம்ப சந்தோஷத்தை தருது ” என மிகவும் அழகாக அமைதியாக கூறியுள்ளார். சினிமாவை தாண்டி இவர் செய்து வரும் இந்த சேவையினை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.மற்றும் தாங்கள் இதை publicity பண்ணுவதற்கு காரணம் இது குறித்து தெரியாத இந்தியாவில் இருக்கும் அனைவரும் பயனடைய வேணும் என்கின்ற ஒரு நல்ல நோக்கத்திற்காக மாத்திரமே இதை நிறைய பேர் தவறாக பேசுகின்றனர்.எனவும் கூறியுள்ளார்.இவர் ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும் கண்ணில் இருந்து கண்ணீர் கசிந்துள்ளதை காணமுடிகின்றது.
Listen News!