• Jul 10 2025

Stop it guys! – ரசிகர்களிடம் எரிச்சலுடன் பதிலளித்த சமந்தா… இணையத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா ரூத் பிரபு. திறமையான நடிப்புக்குப் பின்புலமாகவும் பன்னாட்டுத் தோற்றமுடைய ஸ்டைலிஷ் மூலமும் இன்று வரை பிரபலமாகத் திகழ்கின்றார்.


எப்போதும் ஃபிட்னஸ் மற்றும் ஹெல்த் மீது அதிக கவனம் செலுத்தும் சமந்தா, தினசரி ஜிம் பயிற்சிகளை மேற்கொண்டு வருபவர். அந்தவகையில் தற்பொழுது ஜிம் பயிற்சியினை முடித்து வரும்போது எதிர்பாராத விதமாக சிக்கலில் சிக்கியுள்ளார். 

பிரபல ஜிம் ஒன்றில் பயிற்சி முடித்து, தனது காருக்குள் ஏறுவதற்காக வெளியே வந்த சமந்தாவிற்கு சில ரசிகர்கள் “Good morning Samantha mam!” எனக் குறிப்பிட்டிருந்தனர். அந்தக் கணம், சமந்தா அவர்களை சற்று எரிச்சலுடன் பார்த்து, “Stop it guys!” என்று கூறினார்.


இது அந்த இடத்தில் நின்ற அனைவரையும் ஓரளவிற்கு வியப்படைய வைத்தது. அந்தக் காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களுக்குள் இணையத்தில் பரவ ஆரம்பித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சமந்தாவின் “stop it” ரியாக்ஷன், சமூக வலைத்தளங்களில் விரிவான விவாதங்களை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement