• Jun 17 2025

சேலை கட்டி ரசிகர்களை மயக்கிய பூஜா ஹெக்டே! –இன்ஸ்டாவில் வைரலான ட்ரெடிஷனல் லுக்..!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே, தற்போது தனது அழகான ட்ரெடிஷனல் போட்டோஷூட் மூலம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றார். அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும்,Traditional Look புகைப்படங்கள் மிகவும் தனித்துவமாக அமைந்ததுடன் ரசிகர்கள் மத்தியில் நெருக்கமான இடத்தையும் பிடித்துள்ளது.


விஜய் நடிக்கும் "ஜனநாயகன்" படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளதைத் தொடர்ந்து, அவர் தன் பகுதியை முடித்துவிட்டதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதன் பின் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்களில், அவர் பாரம்பரிய புடவை அணிந்து மிகவும் அழகாக தோன்றியுள்ளார். புகைப்படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களுக்குள்ளேயே, இன்ஸ்டாகிராமில் மில்லியனைத் தாண்டிய லைக்கினைப் பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement