• Mar 23 2025

ரசிகர்களின் அன்பால் கண்கள் கலங்கிய சமந்தா...! இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலயே...

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ரசிகர்களின் மனதில் தனிப்பட்ட இடத்தை பிடித்துள்ள நடிகை சமந்தா ரூத் பிரபு, சமீபத்தில் நடந்த பாலச்சந்தர் விருது விழாவில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் கூறிய தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.


சமந்தா, 2021 ஆம் ஆண்டு வெளியான 'Family Man 2' வெப்சீரிஸ் மூலம் அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து சில வெற்றிப் படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் 2022ல் அவருக்கு மையோசிடிஸ் (Myositis) எனும் மருத்துவ பிரச்சனை ஏற்பட்டது. இது ஒரு நரம்பியல் நோயாகும். இதனால், சமந்தா தனது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு திரை நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்தார்.

இந்த ஓய்வு இரண்டு வருடங்களாக நீடித்துவிட்டாலும், ரசிகர்களுக்கு அவர் மீதான அன்பு இன்னும் குறையவில்லை. சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு பதிவுக்கும் லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்களை வழங்கி ரசிகர்கள் ஆதரவளித்துவருகின்றனர்.


பாலச்சந்தர் விருது பெற்ற நாள், சமந்தாவுக்கு உண்மையில் மிக முக்கியமான தினமாகவே மாறிவிட்டது. அந்த விழாவின் போது, “நான் கடந்த 2 வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் என் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் அன்பு கொஞ்சம் கூட குறையவில்லை. அதனால் தான், இன்னும் வாழ நான் உற்சாகத்துடன் இருக்கின்றேன். உங்கள் அன்பை பார்த்து என்னால் எதுவும் கதைக்க முடியவில்லை" என்றார். இதனைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் கத்திக் கூச்சல் போட்டார்கள்.

Advertisement

Advertisement