நடிகை ரோஜா துப்புரவு தொழிலாளரை அவமதித்த விவகாரம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆன நிலையில் தற்போது அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தைக் கேட்ட நெட்டிசன்கள் ரோஜா இவ்வளவு நல்லவரா என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை ரோஜா தனது கணவர் செல்வமணியுடன் திருச்செந்தூருக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்திருந்தார். அவருக்கு சிறப்பு பிரசாதம் அளிக்கப்பட்ட நிலையில் அவர் கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் உள்ளிட்டவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் சிலர் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் இரண்டு துப்புரவு தொழிலாளிகள் ரோஜாவுடன் புகைப்படம் எடுக்க வந்தனர்.
அப்போது ரோஜா சில அடி தூரத்திலேயே அவர்களை நிற்கச் சொல்லிவிட்டு இடைவெளி விட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளுடன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட ரோஜா, துப்புரவு தொழிலாளர்களை மட்டும் அப்புறப்படுத்தும் வகையில் நில் என்று சொன்னது ஏன் என்று நெட்டிசன்கள் விளாசினர்.
இந்நிலையில் இதற்கு நடிகை ரோஜா விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ’துப்புரவு தொழிலாளர்கள் என்னை நோக்கி ஓடி வந்ததால் அவர்கள் விழுந்து விடப் போகிறார்கள் என்று என்ற நல்ல எண்ணத்தில், அவர்களை மெதுவாக வாங்க என்று தான் கை காட்டினேன். அவர்களை நான் நிற்கச் சொல்லவில்லை, மேலும் தொடக்கூடாது தள்ளி நில்லுங்கள் என்று நான் சொன்னதாக தவறாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
துப்புரவு தொழிலாளர்கள் செய்யும் பணி உயர்வானது, எனக்கு அவர்கள் மீது மிகுந்த மதிப்பு மரியாதையும் உண்டு, அவர்களை எப்படி நான் தொடர்பு தொட வேண்டாம் என்று சொல்வேன், என் மீது சிலர் காழ்ப்புணர்ச்சியில் இருப்பதால் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகின்றனர்’ என்று தெரிவித்தார்.
ரோஜாவின் இந்த விளக்கத்திற்கு ’இவ்வளவு நல்ல எண்ணம் உள்ளவரை புரிந்து கொள்ளாமல் அவதூறு பரப்புகின்றார்களே’ என கமெண்ட் பதிவாகி வருகிறது.
Listen News!