• Nov 25 2025

சன் டிவியில் சீரியல் நடிகைக்கு நடந்த விபரீதம்.. நொறுங்கிய காரில் உயிர் தப்பிய அதிசயம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள், மருமகள், அருவி போன்ற பல சீரியல்கள் நடித்து பிரபலமானவர்தான் நடிகை ஜீவிதா. சன் டிவியில் மட்டுமில்லாமல் ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற பல சேனல்களிலும் நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.

மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியல் மூலமாகத்தான் சின்னத்  திரையில் அறிமுகமானார் ஜீவிதா. அதன் பிறகு சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். அந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் இவர் வில்லியாக நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பாசமலர், நிலா, தேவதை போன்ற சீரியல்களிலும் நடித்தார். மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டுப் பெண் என்ற சீரியலிலும் நடித்தார். இப்போது மருமகள் என்ற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டுள்ளார்.

d_i_a

சின்னத்திரையில் பிஸியாக காணப்படும் ஜீவிதா தான் முதலில் சென்னைக்கு வந்தது டான்ஸ் கிளாஸ் தொடங்க வேண்டும் என்று தான் என கூறியுள்ளார். ஆனாலும் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் நடிப்பில் முழுமையாக மாறிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், நேற்றைய தினம் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது இவருடைய கார் விபத்தில் சிக்கி சேதம் அடைந்துள்ளது. ஆனாலும் தனக்கு எந்த வித உயிர் ஆபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதாவது திருமண மண்டபம் ஒன்றில் ஷூட்டிங் நடைபெறும் போது வெளியே இவருடைய கார் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு இருந்த பெரிய மரம் ஒன்று இவருடைய காரில் திடீரென சரிந்து விழுந்து உள்ளது. இதனால் காரின் முன் பக்கம், சைட் கண்ணாடி ஆகியவை சேதம் அடைந்துள்ளன.

இது தொடர்பில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்ட  ஜீவிதா, நல்ல வேலை நான் காரில் இல்லை. அந்த நேரம் நான் வெளியே இருந்ததால் உயிர் பிழைத்தேன். கார் தான் அதிகமாக சேதப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் கிளைம் பண்ணுவதற்கு கொடுத்து இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement