• Jan 18 2025

த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆதரவு: தஞ்சை கோவிலில் விசேஷமாக தரிசனம் செய்த வனிதா விஜயகுமார்

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் முன்னணி நடிகை ஆன  வனிதா விஜயகுமார் இன்று தஞ்சை பெரிய கோவிலை நேரில் வந்து தரிசனம் செய்தார்.கோவில் தரிசனத்தினை முடித்த இவருடன் தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் பலரும் வனிதாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


இந்நிலையில் நடிகை அவர்கள் "த.வெ.க தலைவர் விஜய் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என எனது இதயத்திலிருந்து வாழ்த்துகின்றேன் மற்றும் தனது மகள் யோவிக்காவின் தயாரிப்பில் தான் இயக்கவுள்ள படத்தின் பணிகள் ஆரம்பித்துள்ளதாகவும் தனது பட  வேலைகள் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுவதற்கு வந்ததாகவும்"ஊடகங்களின் பேட்டிக்கு பதிலளித்துள்ளார் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் சமூகப்பணிகள் மற்றும் அவர்களது வளர்ச்சிக்கு மக்களிடையே பெரும் ஆதரவும் நம்பிக்கையும் கிடைக்கவேண்டும் என அன்புடன் வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.இந்த உரை மேலும் விஜய் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement