சிறுத்தை சிவா கூட்டணியில் நடிகர் சூர்யா நடித்துள்ள பான்இந்திய திரைப்படம் தான் கங்குவா. இது ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் பாலிவுட் பிரபலம் திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். பாகுபலி, RRR, KGF படங்கள் போன்று பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளின் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கங்குவா அமையும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. சூர்யாவின் நடிப்பில் 2 ஆண்டுகளாக எந்த ஒரு படமும் திரையில் வெளியாகவில்லை.

d_i_a
எனவே சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் கங்குவா திரைப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.இந்நிலையில் சமீபத்தில் கங்குவா திரைப்படம் சென்சார் செய்யப்பட்டது. சென்சார் குழு படத்தினை பார்வையிட்டு படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் ரன்டைம் 2 மணி நேரம் 34 நிமிடம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

இதையடுத்து கங்குவா திரைப்படத்தை சென்சார் குழு மனதார பாராட்டியுள்ளது. படம் மிகப்பிரம்மாண்டமாக இருப்பதாகவும், தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கங்குவா அமைந்துள்ளதாகவும் படக்குழுவை சென்சார் பாராட்டியிருக்கின்றது.எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு கங்குவா திரைப்படம் இருக்கும் மேலும் ஆயிரம் கோடி வசூலை பெரும் எனவும் நம்பப்படுகிறது.
 
                              
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _69018ba7ea1f8.jpeg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!