• Dec 06 2024

புதிய திட்டம் போடும் ரோகிணி! சத்தியா அம்மாவை கைது செய்த போலீசார்! அதிர்ச்சியில் மீனா!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

இன்று சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று விஜய்யாவிற்கு பார்வதி மீனா ரொம்ப நல்ல பொண்ணு என்று சப்போட் பண்ணி பேசுகிறார். அதற்கு விஜய்யா கோப்படுகிறார். பின்னர் அவரை சமாதானம் செய்கிறார் பார்வதி. வீட்டில் மீனா நடந்ததை நினைத்து அழுகிறார். முத்து அவருக்கு சமாதானப்படுத்துகிறார். மீனா நாங்க 2 பேரும்  தனியா போயிறலாமா என்று கேட்கிறார். இதற்கு முத்து கோபப்படுகிறார். அப்பாவுக்காக நாங்க இந்த வீட்டை விட்டு போகக்கூடாது கடைசி காலம் வரைக்கும் இங்க தான் இருக்கணும் என்று சொல்கிறார். 



சுருதியின் அம்மா அண்ணாமலையிடம் விஜயா எங்க என்று விசாரிக்க அவ பார்வதி வீட்டுக்கு போய் இருக்கா எப்போ வருவாங்கனு தெரியல என்று சொல்கிறார். இடையில் வந்த ரோகிணி நடந்த விடையத்தை சொல்ல சுருதி அம்மா ஓவராக பேசிக்கொண்டு இருக்கிறார். இதனை கேட்ட முத்து இடை மறித்து உங்க கணவர் அப்படி இல்ல அதைவிட மோசமானவர் போலையே என்று சொல்கிறார். இதனால் மாறி மாறி வீட்டுக்குள் பேசி கொண்டு இருக்கிறார்கள். பின்னர் அவர் சுருதியின் ரூமிட்கு சென்று விட அண்ணாமலை ரோகிணியிடம் இது எல்லாம் சொல்ல வேணாம் வெளிய தெரியாத வரைக்கும் தான் குடும்பம் மரியாதையா இருக்கும் என்று சொல்கிறார்.


அப்போது சிட்டி கால் பண்ணி ரோகிணியை வர சொல்ல உடனே ரோகிணி சென்று விடுகிறார். ரூமில் சுருதி மீனா தம்பி திருடுன விஷயம் பத்தி நீக்க ஏன் கேக்குறீங்க சொந்தக்காரவங்க கேட்டா தெரியாதுன்னு சொல்லுங்க என்று அம்மாவை திட்டி கொண்டு இருக்கிறார். இந்த குடும்பம் நம்ப குடும்பம் மாதிரித்தான் நீங்க பேசாம அங்க வந்துருங்க என்று சொல்கிறார். ரவி நாங்க வரமுடியாது ஆண்டி இது எங்க குடும்பம் நாங்க பாத்துகிறோம் என்று சொல்கிறார். சுருதியும் ரவிக்கு சப்போட் செய்கிறார். 


மீனாவுக்கு கால் செய்த சீதா சத்தியாவை தேடி போலீஸ் வீட்டுக்கு வந்தாங்க அவன் அங்க இல்ல அதுனால அம்மாவை கூட்டி வந்துட்டாங்க என்று அழுகிறார். இதனை கேட்ட முத்து மீனாவை கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். முத்து போலிஷ் அதிகாரியிடம் பேசுகிறார்.விஜய்யா போலிஷ் கம்லைட் கொடுத்து இருக்காங்க அவங்க வந்து சொல்லட்டும் நாங்க விடுறோம். சத்தியா வந்தா தான் அவங்க அம்மாவை விடுவோம் என்று சொல்கிறார். அம்மாவை விடுங்க என்று மீனா அழுகிறார்.  இத்தோடு இன்றைய நாள் எபிசோட் முடிவடைகிறது. 


  



Advertisement

Advertisement