• Jan 18 2025

முத்துவேல் - சக்திவேல் வீட்டில் கல்யாணம்.. மீனாவுக்கு ஏற்பட்ட அவமானம்.. பலிக்காத மயிலு நாடகம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ’சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் தங்க மயிலுக்கு மீண்டும் பாக்கியம் தவறான அறிவுரைகளை கூறுகிறார். எப்படியாவது மாப்பிள்ளையை கைக்குள் போட்டுக் கொள். நீ இல்லாமல் மாப்பிள்ளையால் இருக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்து’ என்று கூறுகிறார்.

இந்த நிலையில் கதிர் மற்றும் ராஜி தங்கள் அறையில் பேசிக்கொண்டிருக்கும்போது ராஜி ஒரு கதையை கூறி நிச்சயம் நீ பெரிய ஆளாக வருவாய் என்று கூற, அதற்கு கதிர் கிண்டலுடன், நீ பேசாமல் மோட்டிவேஷன் ஸ்பீச் வேலைக்கு செல்லலாம் என்று கூறுகிறார். இதனால் ராஜி செல்ல கோபம் அடைகிறார்.

இந்த நிலையில் முத்துவேல் - சக்திவேல் வீட்டில் திருமண பேச்சு நடக்கிறது. குமரவேலுக்கு பெண் பார்த்திருக்கும் நிலையில் சீக்கிரம் திருமணம் நடத்த வேண்டும் என்றும், எதிர் வீட்டுக்காரர்கள் பொறாமைப்படும் அளவுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடத்த வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் பேசுகின்றனர்.



இந்த நிலையில் மீனா தனது அப்பாவின் பிறந்தநாளுக்கு கோவிலுக்கு சென்று அவரது பெயரில் அர்ச்சனை செய்கிறார். அப்போது மீனாவின் அப்பாவும் அம்மாவும் தற்செயலாக வர, மீனா தனது தந்தையிடம் உங்களுக்காக தான் அர்ச்சனை செய்கிறேன் என்று கூறுகிறார். அதை கேட்டு ஆத்திரமாகும் மீனாவின் அப்பா, மீனாவையும் செந்திலையும் அர்ச்சனை செய்யும் காட்சிகள் உள்ளன.

 இதனை அடுத்து தலை வலிக்கிறது என்று நாடகம் போட்ட தங்கமயில் அவர் நினைத்தது மாதிரி எதுவும் நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறார். பின்னர்  கோமதியிடம் ’இன்னைக்கு சாப்பாடு கொண்டு போகவில்லை’ என்று சொல்ல,  அவர் அசால்டாக ’சரி’ என்று கூறி, ’சாப்பாடு கொண்டு செல்வதெல்லாம் ரொம்ப நாளைக்கு நடக்காது என்று எனக்கு தெரியும்’ என்று கூறுகிறார்.

அப்போது சரவணன் கோமதிக்கு போன் செய்து, ‘மயிலு இன்னும் சாப்பாடு கொண்டு வரவில்லை என சொல்ல, ‘இன்னிக்கி அவ சாப்பாடு கொண்டு வர மாட்டா,  நீ வீட்டுக்கு வந்து சாப்பிடு, அல்லது ஓட்டலில் சாப்பிடு என்று சொல்ல சரவணன் அப்செட் ஆவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement