• Sep 16 2024

’தில்’ ‘தூள்’ துணை இயக்குனருக்கு விக்ரம் கொடுத்த சர்ப்ரைஸ்.. மீண்டும் ஒரு த்ரில் படமா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விக்ரம் நடித்த ’தில்’ மற்றும் ‘தூள்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக இருந்து அதன் பின் தமிழில் சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர், விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ’தில்’ 2003 ஆம் ஆண்டு வெளியான ‘தூள்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் தரணி என்பது தெரிந்தது. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சாந்தகுமார்.

இவர் அருள்நிதி நடித்த ’மௌனகுரு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் ஆர்யா நடித்த ’மகாமுனி’ மற்றும் சமீபத்தில் வெளியான அர்ஜுன் தாஸ் நடித்த ’ரசவாதி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.



இந்த நிலையில் சமீபத்தில் விக்ரமை சந்தித்து ஒரு திரில் கதையை சாந்தகுமார் கூறிய நிலையில் அந்த கதை விக்ரமுக்கு பிடித்து விட்டதாகவும் இதனை அடுத்து இருவரும் ஒரு படத்தின் பணி புரிய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

தற்போது விக்ரம் ’வீர தீர சூரன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சாந்தகுமார் படத்தில் இணைவார் என்றும் இந்த படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

Advertisement

Advertisement