தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31-ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படத்துடன் கவின் நடித்த பிளடி பெக்கர் திரைப்படம், ஜெயம் ரவி நடித்த பிரதர் மற்றும் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் ஆகிய திரைப்படங்கள் வெளியானது.
இந்த நான்கு படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கைப் போடு போட்டு வருகின்றது. மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார்.
d_i_a
இந்த திரைப்படம் வெளியான முதல் நாளே சுமார் 42.3 கோடிகளை வசூலித்து இருந்தது. நாளுக்கு நாள் இதன் வசூல் அதிகரித்தவாறே உள்ளது. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரையில் கால் பதித்த சிவகார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு என தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். அமரன் படத்தின் மூலம் அவருடைய மதிப்பும், ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பும் மேலும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், அமரன் திரைப்படம் உலக அளவில் சுமார் 191 கோடிகளை கடந்த 9 நாட்களில் வசூலித்து உள்ளதாம். அத்துடன் சனிக்கிழமை இன்றைய தினத்துடன் 200 கோடி ரூபாய் வசூலை அமரன் திரைப்படம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!