• Jan 18 2025

சமூக வலைதளங்களில் வைரலாகும் Game Changerடீசர்...ரசிகர்கள் கொண்டாட்டம்

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்பராஜ் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு எஸ். ஷங்கர் எழுதி இயக்கி வரவிருக்கும் இந்திய தெலுங்கு மொழி அரசியல் அதிரடி  திரைப்படம் "Game Changer". ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் மற்றும் சுனில் ஆகியோர் நடித்துள்ளனர்.


பிரமாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு ஆவலாக காத்திருக்கும் இந்த படம், அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் கண்ணைக் கவரும் காட்சிப்பதிவு மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முன்னணி நடிகர்கள் பரபரப்பாக நடிப்பதோடு, கதைத் திருப்பங்களும் விறுவிறுப்பாக அமைந்துள்ளன.

சமூக வலைதளங்களில் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகியுள்ளது.இப் படம் அடுத்தவருடம் தை மாதம் 5 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement