நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவே தனது இயக்கத்தில் சில படங்களை கொடுத்து மாஸ் காட்டி வருகிறார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிப்பில் lik திரைப்படத்தில் படத்தி வருகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் 'ஓ மை கடவுளே' என்ற படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுபாமா பரமேஷ்வரன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் முதல் முறையாக தமிழில் அறிமுகம் ஆகிறார் நடிகை காயுடு லோஹர்.
d_i_a

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு டிராகன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் பிரபல யூடியூபர்கள் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. vj.சித்து என்ற சேனல் மூலம் மிகவும் பிரபலமான யூடியூபர்கள் ஆன விஜி.சித்து மற்றும் அர்ஷித் இந்த திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இது தொடர்பான போஸ்ட் வெளியாகி உள்ளது.

Listen News!