• Jan 18 2025

கோபி காலில் விழுந்து கெஞ்சிய எழில்.. இறுதியாக எடுத்த விபரீத முடிவு?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழிலிடம் ப்ரொடியூசர் இந்த பட பூஜை நிகழ்வில் உங்களுடைய அம்மா கலந்து கொள்ள கூடாது என்று சொல்லுகின்றார். இதைக்கேட்டு எழில் அதிர்ச்சி அடைகின்றார். 

ப்ரொடியூசரிடம் எழில் கெஞ்சிக் கொண்டு இருக்கும்போது அந்த நேரத்தில் கோபி வந்து என்னுடைய மகன் என்ன சொல்லுகின்றார் என்று கேட்கின்றார். மேலும் இவை அனைத்திற்கும் பின்னால் நான் தான் உள்ளேன் அதனால் பாக்கியாவை இந்த பட பூஜைக்கு வர வேண்டாம் என்று சொல்லி என சொல்லுகின்றார்.

d_i_a

இதைக் கேட்ட எழில் என்ன செய்வது என்று தெரியாமல் மொட்டை மாடியில் நின்று தனியாக அழுகின்றார். அதன் பின்பு கோபியிடம் அவருடைய கைகளைப் பிடித்து நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். ஆனால் அம்மா இந்த பட பூஜையில் மட்டும் கலந்து கொள்ளட்டும் என காலில் விழுந்து கெஞ்சி கேட்கின்றார்.


ஆனாலும் கோபி இப்படித்தானே நானும் கெஞ்சினான். ஆனால் எனது அப்பாவுக்கு கொல்லி வைக்க விட்டீர்களா? நீயும் உங்க அம்மா கூட தானே சேர்ந்தா.. அதனால என்னால முடியவே முடியாது.. இந்த பூஜைக்கு உங்க அம்மா வரக்கூடாது என்று சொல்லிச் செல்கிறார்.

இறுதியாக பாக்யா  எழிலை சந்தித்து தான் கோவிலுக்கு போயிட்டு வந்ததாக ரொம்ப சந்தோஷத்துடன் சொல்லுகின்றார். மேலும் வா உள்ளே போகலாம் என்று கூப்பிட, நான் என்ன சொன்னாலும் நீ கேட்பா தானே.. அதனால உள்ள வராத போயிடு என்று அதிர்ச்சி கொடுக்கின்றார் எழில்.. இதைக் கேட்டு பாக்யா திகைத்துப் போயிருக்கின்றார். இது தான் இன்றைய எபிசோட்..

Advertisement

Advertisement