• Jan 19 2025

தவிடு பொடியான கோபியின் பேராசை.. இறுதி நேரத்தில் எழில் வைத்த ட்விஸ்ட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் , பட பூஜைக்கு வந்த பாக்கியாவை உள்ளே வர வேண்டாம் என்று எழில் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்கின்றார்.  அதற்கான காரணம் என்னவென்று பாக்கியா கேட்க, தான் இப்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன்.. நீதானே ஆசைப்பட்டாய் நான் பெரிய டைரக்டர் ஆகணும் என்று.. அப்படி நினைத்தால் இங்கிருந்து போய் விடு என்று அழுகிறார்.

பாக்கியாவுக்கு எதுவும் புரியாத நிலையில் நீ அழாத நான் போறேன் என்று ஒதுங்கி செல்கின்றார். செல்லும் போது அங்கு வந்த அமிர்தா அம்மாவை கூப்பிடுங்க என்று சொல்ல, வேணாம் என்று அவரை உள்ளே இழுத்துச் செல்கின்றார் எழில்.  மேலும் அம்மா வந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லுகின்றார்.

d_i_a

இதை தொடர்ந்து பட பூஜை ஆரம்பிக்கலாமா என்று டைரக்டர் கேட்க, ஆமாம் என்று பதில் சொல்லுகின்றார். ஆனாலும் அம்மா வரவில்லை என்று இனியாவும் செழியனும் கேட்க, அம்மா வரமாட்டாங்க என்று சொல்லுகின்றார். அவர்கள் போன் பண்ணவும் பாக்கியா எடுக்கவில்லை.


இதை அடுத்து படத்திற்கான பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு எழில் படத்தின் டைட்டிலை ஓபன் பண்ணும் போது அதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகின்றார். அதாவது எனது படத்தின் டைட்டில் எனது அம்மாவின் பெயர் தான் என்று எழில் கத்தி சொல்லுகின்றார். இதை வெளியில் இருந்து கேட்ட பாக்கியா கண்கலங்குகின்றார். மேலும் அம்மாவை பற்றி பெருமையாக பேசுகின்றார் எழில்.

இதையெல்லாம் கேட்டு பாக்கியா கண்கலங்கி அருகதோடு வெளியில் செல்லும் போது அங்கு பாக்கியலட்சுமி போஸ்டரை ஒட்டுவதை பார்த்து சந்தோஷப்படுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்..

Advertisement

Advertisement